யாழில் வாள் வெட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது!!

481

vaal

யாழ். குடா நாட்டில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்பட்டும் ஐந்து இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து இரண்டு வாள்களும் வாள் வெட்டுக்கு தயாராகும் புகைப் படங்கள், வீடியோக்கள் அடங்கிய கைத்தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோப்பாய் பொஸிஸ் அதிகாரி கருத்து தெரிவிக்கையில், கைதுசெய்யப்பட்ட ஐவரில் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து வாள்கள் இரண்டு மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஜபோன் கைதொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இவர்கள் சுன்னாகம், உரும்பிராய், திருநெல்வேலி, கோப்பாய் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் யாழ். மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்வி கற்பவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.