2016 ஆம் ஆண்டின் உலக அழகுராணி (Miss World 2016) போட்டி அமெரிக்காவில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையின் சார்பில் மிஸ் வேர்ல்ட் ஸ்ரீலங்கா 2016 அழகுராணி அம்ரிதா டி சில்வா பங்குபற்றுகிறார்.
இறுதிச் சுற்று எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 116 நாடுகளின் அழகுராணிகள் இப் போட்டியில் பங்குபற்றுகின்றனர்.
இப் போட்டியில் பங்குபற்றும் அழகுராணிகளில் தமது அபிமானத் துக்குரியவர்களுக்கு இணையத்தளம் மூலம் மக்கள் வாக்களிக்கலாம். இந்நிலையில், தனக்கு வாக்களிக்குமாறு இலங்கை அழகுராணி அம்ரிதா டி சில்வா கோரியுள்ளார்.
http://pageantsnews.com/vote-now-will-win-miss-world-2016/ எனும் இணையத்தளத்தில் வாக்குகளை அளிக்க முடியும். இப் போட்டியில் பங்குபற்றும் அழகுராணிகள் சிலரை படங்களில் காணலாம்.









