மலேசியாவிலிருந்து சீனாவின் தலைநகர் நோக்கி சென்ற எம்.எச்.370 பயணிகள் விமானம் வான்பரப்பில் காணாமல் போயிருந்தது. காணாமல் போன விமானத்தை தேடி பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டர்.
தற்போது விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானதுடன் விமானத்தின் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எம்.எச்.370 மலேசிய விமானத்தின் பாகங்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கையின் கடல்சார் விஞ்ஞானி ஒருவர் உதவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சரித்த பட்டிஆராச்சி என்ற அவர் மேற்கு அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
மாதிரிகளை பயன்படுத்தி அவர் மேற்கொண்ட ஆய்விற்கமைய எம்.எச்.370 மலேசிய விமானத்தின் பாகங்கள் கிடைக்க கூடிய பிரதேசம் தொடர்பில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர் பட்டிஆராச்சி கண்டுபிடித்து, வெளியிட்ட தகவல்களுக்கமைய ரீயூனியன் தீவில் விமானத்தின் பறக்கும் பாகம் கிடைத்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் அந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு சிதைந்த பாகங்கள் கிடைக்கும் பிரதேசம் மாத்திரம் இன்றி ரீயூனியன் தீவிற்கு குறித்த பாகங்கள் வந்து சேறும் காலத்தை உட்பட சரியாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் ஒரு வருடத்திற்கு பின்னர் எம்.எச்.370 மலேசிய விமானத்திற்கு என்ன நடந்ததென தேடிச் சென்ற ஆய்வு பணியாளரான அமெரிக்க நாட்டை சேர்ந்த பிலேன் கிப்ஸனுக்கு, மடகாஸ்கர் கடலோரத்தில் விமானத்தின் ஒரு பாகம் கிடைத்துள்ளது. எனினும் அந்த பாகம், பேராசிரியர் பட்டிஆராச்சி வழங்கிய தகவலுக்கமையவே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2014ம் ஆண்டு மார்ச் மாதம் 227 பயணிகள் உட்பட 239 பேருடன் பயணித்த, மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் காணாமல் போயிருந்தது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக மலேசிய பிரதமர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






