அதிகாரத்தில் இருக்கும்போது பொது இடங்களில் தமது பெயரைப் பயன்படுத்துவது இலங்கையிலுள்ள எமக்கு பழக்கப்பட்ட ஒரு அரசியல் கலாசாரமாகும்.
ஆயினும், கியூபாவின் தன்னிகரில்லாத் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ முழு உலகத்திற்கும் முன்மாதிரியை வழங்கிவிட்டு உயிர்நீத்தார்.
நாட்டில் எந்தவொரு இடத்திற்கோ அல்லது வீதிக்கோ தன்னுடைய பெயரை சூட்ட வேண்டாம் என்ற இறுதிக் கோரிக்கையை அவர் முன்வைத்தார்.
ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டப்படிப்பை பின்தள்ளிவிட்டு ஹவானா சுருட்டைக் கையிலேந்தி, சுரண்டப்பட்ட மக்களுக்காக 13 வருடகால புரட்சியை முன்னெடுத்து, 1959 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி மக்கள் குடியரசாக கியூபாவை உருவாக்கிய பிடெல் காஸ்ட்ரோ, அமெரிக்க கண்டத்தில் சோஷலிச கொள்கையை போஷித்த ஒரு அசகாய வீரராவார்.
ஒருமுறை 15 வருடகால சிறைத்தண்டனைக்கு ஆளாகிய சந்தர்ப்பத்தில், வரலாறு தம்மை விடுதலை செய்யும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
தன்னிகரில்லா தலைவரின் அஸ்தி சான்டா பிஜேனியாவிலுள்ள வீரர்கள் மயானத்தில் புதைக்கப்பட்டபோது, இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட கெஸ்ட்ரோவின் கூற்றை உறுதிசெய்தனர்.
கெஸ்ட்ரோவின் இழப்பு, உலக அரசியலில் ஈடுசெய்ய முடியாத ஒரு குறையாகும் என சுட்டிக்காட்டியுள்ள அரச தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக நிபுணர்கள், பிடெல் கெஸ்ட்ரோவிற்கு வரலாற்று ரீதியாக கிடைத்துள்ள உன்னத இடத்தை உறுப்படுத்தியுள்ளனர்.
அரச தலைவராக அன்றி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மற்றும் அதனைமுன்னிட்ட உன்னிப்பாக கவனம் செலுத்திய சிரேஷ்ட மனிதராக கெஸ்ட்ரோ இன்று வீரர்கள் மயானத்தில் இளைப்பாறுகின்றார்.