ரயில் மீது ஏறி செல்பி எடுத்த சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!

1012

selfi

ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் கூரை மீது ஏறி செல்பி எடுத்த சிறுவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் தற்போது மருத்துவமனையில் கவலைகிடமாக உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் காசிராஜன். இவரின் மகன் யுவராஜ் (17) இவர் தன் வீட்டருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் யுவராஜின் பெரியப்பா மகன் திருமணம் நெல்லையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள காசிராஜன் அவர் குடும்பத்துடன் நெல்லை வந்தார்.

யுவராஜ் தனது உறவுகாரர் மகன் பார்த்திபன் (15) என்பவருடன் நெல்லையை சுற்றி பார்த்து கொண்டிருந்தார். அப்போது இருவரும் நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்தார்கள்.

அப்போது ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் நிறுத்தப்படும் பிளாட்பாரத்தில் அவசரகால மீட்பு ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இதை பார்த்த யுவராஜ் அந்த ரயிலின் கூரை மீது ஏறி நின்று தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அதன் மேலே சென்ற உயர் அழுத்த மின்சார லைனை அவர் கவனிக்கவில்லை.

எதிர்பாராதவிதமாக யுவராஜின் கை மின்சார வயரில் பட அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். கருகிய நிலையில் உயிருக்கு போராடிய யுவராஜை அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள்

அங்கு கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.