திருமண நிகழ்ச்சியில் நடனப்பெண் சுட்டுக்கொலை : மணமகன்னின் நண்பனின் வெறிச்செயல்!!(வீடியோ)

659

dead

பஞ்சாப்பில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனப் பெண் வாலிபர் ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் மவுர் பகுதியில் நடந்த திருமணம் ஒன்றில் நேற்றிரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அப்போது திருமண நிகழ்ச்சியில் மணமகனின் நண்பர்கள் அதிக போதையில் இருந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் போதை தலைக்கேறியதும் மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தவர்களோடு சேர்ந்து ஆட முயற்சி செய்தார்.

அப்போது அவரை பலரும் தடுத்து மேடையில் ஏறக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

இதனால் கடும் கோபமடைந்த அந்த வாலிபர் நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

மேடையில் சரிந்து விழுந்து உயிருக்குப் போராடிய பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.