தொலைந்து போன சிறுவன் திருநங்கையாக வீடு திரும்பினார் : குடும்பத்தார் கதறல்!!

577

boy

தமிழகத்தில் சிறுவயதில் மாயமான மாணவன் ஒருவர் தற்போது திருநங்கையாக மாறி வீடு திரும்பியுள்ள சம்பவம் குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதி அருகே உள்ள இடையங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் சிறுவயதில் தன்னுடைய சித்தி வீட்டில் தங்கி தான் படித்து வந்துள்ளார்.

திடீரென்று கடந்த டிசம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு லட்சுமணன் மாயமானார். குடும்பத்தார் எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் வழக்கு பதிவு செய்து லட்சுமணன் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் லட்சுமணன் கறம்பக்குடி பகுதியில் உள்ள சில திருநங்கைகளுடன் அங்கிருந்த கடைகளில் கல்கி வசூல் செய்துள்ளார்.

இதைக் கண்ட பொலிசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தான் மும்பைக்குச் சென்று ஆபரேசன் செய்து திருநங்கையாக மாறி, அங்கேயே சிறிது காலாம் தங்கியதாகவும், அதன் பின்னர் தான் தமிழகம் வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதைக் கண்ட அவருடைய சித்தியான லட்சுமி தான் வளர்த்த மகன் லட்சுமணன் திருநங்கையாக மாறியதை கண்டு பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்.

கண்ணீருடன் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து பொலிசார் அவரை செல்வியுடன் அனுப்பி வைத்தனர். சிறுவயதில் மாயமானவர் திருநங்கையாக வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.