விளையாட்டு வீராங்கனைக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம்!!

574

abuse

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை. டெல்லி பொலிஸ் சிறப்பு கமி‌ஷனர் எம்.கே. மீனாவை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.

அதில் டெல்லியில் நடந்த தனது பிறந்தநாள் விழா விருந்தில் தனது முன்னாள் பயிற்சியாளர் கலந்து கொண்டார். அப்போது அவர் குளிர்பானத்தில் தனக்கு மது கலந்து குடிக்க வைத்தார். மயக்கத்தில் இருந்த போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக டெல்லி பொலிசார் முன்னாள் பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் கொடுத்த துப்பாக்கி சுடும் வீராங்கனையின் பெயரையும், அவரது முன்னாள் பயிற்சியாளர் பெயரையும் பொலிசார் வெளியிடவில்லை.

அந்த வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டவர் என்றும் பயிற்சியாளர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர் அர்ஜூனா விருது பெற்றவர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி சிறப்பு கமி‌ஷனர் எம்.கே. மீனா கூறுகையில் புகார் தொடர்பாக பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.