ஊருக்கு சகோ­த­ரி­கள் : வீட்­டுக்குள் தம்­ப­திகள்!!

594

couple

தமி­ழ­கத்தின், நடுத்­தர வர்க்­கத்து வாழ்க்கைச் சூழல் கொண்ட லைன் வீடு. ஜான்­ஸியும், லட்­சு­மியும் அங்கு தான் குடி­யி­ருக்­கி­றார்கள். வெளி­யு­ல­கத்தைப் பொறுத்­த­வரை இரு­வரும் சகோ­த­ரிகள். ஆனால் ஓரி­ன­ச்சேர்க்கை ஈர்ப்பால் இரு­வரும் தம்­ப­தி­க­ளா­கவே வாழ்ந்து வருகின்றனர்.

ஜான்ஸிக்கு சொந்த ஊர் செங்­கற்­பட்டு. லட்­சு­மிக்கு காஞ்­சி­புரம். ஒரு எக்ஸ் போர்ட் நிறு­வ­னத்தின் விடு­தியில் தங்­கி­யி­ருந்­த­போது காதல் பற்­றிக்­கொண்­டது. இரு­வரும் வாழ்க்­கையில் இணைந்து விட்­டார்கள்.

“நான் லட்­சு­மியை சந்­திச்­சது ரொம்­பவே சங்­க­ட­மான தருணம். என் பிரி­யத்­துக்கு உரிய ஒரு பெண்ணை இழந்­துட்டு தனி­மை­யில தவிச்ச நேரம். “உன் கூடப் பேசிக்­கிட்டே இருக்­கனும் போல­ருக்கு ஜெனி…

உன் மடி­யில தலை வச்சுப்படுத்தா கவ­லை­யெல்லாம் மறந்­து­போ­கு­துடி..”ன்னு லட்­சுமி சொல்வா. அதே­மா­திரி தேடல் எனக்கும் இருந்­துச்சு. சமூகம் எங்­களை தம்­ப­தியா ஏத்­துக்­கா­துன்னு தெரியும்.

நம்ம வாழ்க்­கையைத் தீர்­மா­னிக்க சமூ­கத்­துக்கு என்ன உரிமை இருக்கு. நாம தானே தீர்­மா­னிக்­கனும்…” -என்­கிறார் ஜெனி. “எனக்கு நாலைஞ்சு வயசு இருக்­கும்­போதே, குடும்­பத்­தோட தேயிலை தோட்­டத்­துல வேலை செய்ய போயிட்டோம்.

பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். 13 வய­சுல எல்­லோ­ருக்கும் வர்ற பருவ சிந்­த­னைகள் எனக்கும் வந்­துச்சு. ஆனா, என் தேடல்ல ஆண்கள் இல்லை. என் வய­துள்ள பெண்கள் தான் இருந்­தாங்க.

குறிப்பா, உஷா என் மன­துக்கு இதமா இருந்தா. எங்க வீட்­டுல எப்­பவும் இருக்­க­மான சூழ்­நிலை இருக்கும். என் பிரச்­சி­னை­களை பேசக்­கூட முடி­யாது. யாரும் காது கொடுத்துக் கேட்க மாட்­டாங்க.

ஆனா, உஷா என் மேல அவ்­வ­ளவு அன்பு காட்­டுனா. இணை பிரி­யாத தோழி­களா இருந்த நாங்க, ஒரு கட்­டத்­துல பிரிக்க முடி­யாத இணை­களா மாறிட்டோம்.

ஒருநாள், நாங்க ரெண்டு பேரும் தனிச்­சி­ருந்­ததை அம்மா பார்த்­திட்­டாங்க. பெரிய அதிர்ச்சி அவங்­க­ளுக்கு. அடி, உதை. தோழ­மையா இருந்த ரெண்டு குடும்­பமும் கடும் சண்­டை­யோட பிரிஞ்­சுச்சு.

உட­ன­டியா ரெண்டு பேருக்­குமே திரு­மண ஏற்­பாடு தொடங்­குச்சு. “யாரா­வது பெண் பார்க்க வந்தா, விஷத்தை குடிச்­சிட்டு செத்­து­ருவேன்”னு சொல்­லிட்டேன். உஷாவை மூணா­றுல இருந்த சொந்­தக்­கா­ரங்க வீட்­டுல கொண்டு போய் விட்­டுட்­டாங்க. மூணாறு போய் வீதி வீதியா தேடினேன்.

மலைப்­ப­கு­தி­யில ஒரு வீட்­டுல இருந்தா. அவ­ளுக்கு நிச்­ச­ய­தார்த்தம் அள­வுக்குப் போயி­டுச்சு. “இனிமே இங்கே இருக்­கக்­ கூ­டாது”ன்னு, ஒருநாள் அதி­கா­லை­யில ரெண்டு பேரும் ஊரை­விட்டு கிளம்­பிட்டோம்.

ஆனா, பஸ் கிளம்­பு­ற­துக்கு முன்­னா­டியே எங்­களை பிடிச்­சுட்­டாங்க. அவ தற்­கொ­லைக்கு முயற்சி செஞ்சா… நான் சுவர்ல முட்­டிக்­கிட்டு அழுதேன். தேயிலை எஸ்டேட் பூராவும் வேடிக்கை பார்த்­துச்சு.

இதுக்கு மேல போராட முடி­யா­துன்னு தெரிஞ்சு போச்சு. “சரி… சொந்­தக்­கா­ரங்­கள்லாம் சந்­தோ­ஷப்­ப­டுற மாதிரி உனக்­கான ஒரு வாழ்க்­கையை அமைச்­சுக்­கோன்னு சொல்லி அவளை அமை­திப்­ப­டுத்­திட்டு நான் செங்­கற்­பட்­டுல இருந்த மாமா வீட்­டுக்கு வந்­துட்டேன்.

ஆனா, வீட்­டுல இருக்கப் பிடிக்­கலே. வெறுத்துப் போச்சு. ஒரு எக்ஸ்போர்ட் நிறு­வ­னத்­தில சேந்து, ஹோஸ்­டல்­லயே தங்­கிட்டேன். அங்கே தான் லட்­சு­மியும் வேலை செஞ்­சுக்­கிட்­டி­ருந்தா. ரொம்ப சீக்­கி­ரமே என்­கிட்ட ஒட்­டிக்­கிட்டா.

மன­சுக்கு உகந்த தோழியா இருந்தா. அவ கூட இருந்தா கஷ்­ட­மெல்லாம் மறைஞ்­சது போல இருந்­துச்சு. பெரிய ஆறு­தலா இருந்தா. ஒருநாள், “உன் வாசனை பிடிச்­சி­ருக்­குடி… நீ மட்டும் ஆம்­பி­ளையா இருந்தா, உன்­னைத்தான் கட்­டி­யி­ருப்பேன்”னு சொன்னா.

“ஏன் இப்ப கல்­யாணம் பண்­ணிக்க மாட்­டியா”ன்னு கேட்டேன். அப்­ப­டித்தான் எங்க உறவு தொடங்­குச்சு. லட்­சு­மியும் என்னை மாதிரி தான். அவ­ளுக்கும் ஆண்கள் மேல ஈர்ப்பே இல்லை. நாங்க ஏன் இப்­படி இருக்­கோம்ங்­கிற கேள்­விக்கு எங்­க­கிட்ட பதில் இல்லை. பிறப்­பி­லேயே இப்­ப­டி­யான்னு கேட்டா, ஆமான்னு தான் சொல்­லுவேன்.

நான் ஆண் இல்லை. பெண் தான். ஆனா, என்னை ஈர்க்­கி­றது பெண் தான். இது வெறும் பாலியல் மட்டும் சார்ந்த விஷ­ய­மில்லை. மனசு சம்­பந்­தப்பட்­டது.
ஒரு ஆணை, என் இணையா நினைச்­சுக்­கூடப் பார்க்க முடி­யலே.

அண்­ணனா, தம்­பியா, அப்­பாவா அந்த உறவை நான் மதிக்­கிறேன். அதுக்கு மேல, இன்­னொரு உறவா அந்த மேலா­திக்­கத்தை என்­னால தாங்க முடி­யாது…”- உணர்­வு­பூர்­வ­மாக பேசு­கிறார் ஜான்ஸி.

“நாங்க ஒருத்­த­ருக்கு ஒருத்தர் மனப்­பூர்­வமா விரும்­பினோம். இது எங்க தோழி­க­ளுக்கும் தெரியும். சில தோழிகள், “இதெல்லாம் என்­னடி வாழ்க்கை… வெளி­யில தெரிஞ்சா, தப்பாப் பேசு­வாங்க”ன்னு சொன்­னாங்க.

சில தோழிகள் எங்­களைப் புரிஞ்­சு­கிட்­டாங்க. அவங்க முன்­னாடி மோதிரம் மாத்தி எங்க உறவை உன்­ன­த­மாக்கிக்கிட்டோம். திரு­மண விழாவை கொண்­டாடித் தீர்த்­தாங்க. தனியா வீடு பிடிச்சு வாழ்க்­கையை ஆரம்­பிச்சோம். வெளி­யில எங்க உறவைப் பத்தி யாருக்கும் தெரி­யாது.

ரெண்டு பேரும் பியூட்­டி­ஷியன் தொழிலைக் கத்­துக்­கிட்டோம். ஒரு தெலுங்கு சீரியல் நடி­கைக்­கிட்ட வேலைக்குச் சேந்தோம். கை நிறைய சம்­பளம் கிடைக்­குது. லட்­சு­மிக்கு அம்மா இல்லை. அப்பா மட்டும் தான்.

அவ­ருக்கு மாதா­மாதம் ஒரு தொகையை அனுப்­பி­டுவோம். என்னைப் பெத்­த­வங்­க­ளுக்கும் கொஞ்சம் பணம் அனுப்­புவோம். எந்த மனச்­சிக்­கலும் இல்லை. நல்ல புரிதல் உள்ள இணையா லட்­சுமி இருக்கா. வீட்­டுக்­குள்ள என்னை மாமான்னு தான் கூப்­பி­டுவா. ஒரு வேலையும் செய்ய விட­மாட்டா.

“என்ன நீ பொம்­பளை மாதிரி வேலை­யெல்லாம் செய்­யிறே”ன்னு கேப்பா… “நான் பொம்­பள தாண்டி”ன்னா சிரிப்பா. எப்­போ­தா­வது நாங்க, எங்க எதிர்­கா­லத்தைப் பத்தி யோசிக்­கி­ற­துண்டு.

இந்த சமூ­கத்­தில எங்­களை மாதிரி வெளி­யில ஒரு வாழ்க்­கையும், வீட்­டுக்­குள்ள ஒரு வாழ்க்­கையும் வாழுற எவ்­வ­ளவோ பெண்கள் இருக்­காங்க. திரு­ம­ண­மான பெண்கள் நிறைய பேர், இப்­ப­டி­யான மறை­முக படியான மறைமுக உறவோட வாழுறாங்க. நூத்துக்கு ஐம்பது பெண்கள் நிறைய கொடுமைகளை அனுபவிச்சு க்கிட்டு சகிப்புத்தன்மையோட வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.

ஆண்டவன் புண்ணியத்துல எங்களுக்கு அந்தமாதிரி கொடுமையான வாழ்க்கை அமையலே. எங்களால குழந்தைகளைப் பெத்துக்க முடியாது. ஆனா, தத்தெடுக்க முடியும், அதுக்கு சில சட்ட மாற்றங்கள் வரவேண்டியிருக்கு. அதுவரைக்கும் நாங்க காத்திருப்போம்…” என்கிறார் ஜான்ஸி.

நன்றி விகடன்