பிரபல நடிகையை காதலிக்கும் ஜாகீர்கான் : யுவராஜ் சிங் திருமணத்தில் சிக்கினார்!!

431

za

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், பிரபல நடிகை சாஹாரீகாவை காதலித்து வருவதாகவும், இவர்கள் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கானுக்கு 38 வயதாகிறது. இருப்பினும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

முன்னதாக அவர் நடிகை இஷ்கா ஷர்வானியை காதலித்து வருவதாக கூறப்பட்டது.

மேலும், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் ஜாகீர் கான், பிரபல நடிகை சாஹாரீகாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் ஜாகீர்கான் சாஹாரீகாவிடம் தனது காதலை தெரிவித்ததாகவும், அவரது காதலை சஹாரீக்காவும் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாகீர்கானும் சாஹாரீக்காவும் யுவராஜ் சிங் திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்டனர்.