வள்ளம் கவிழ்ந்ததில் மீனவரை காணவில்லை!!

589

boat

சிலாபம் கடலில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். சிலாபம் கடற்பகுதிக்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மீனவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெல்ல, கொலனிய பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய மீனவர் ஒருவரே காணாமல் போயுள்ளதுடன், காணாமல் போன மீனவரை தேடும் பணிகள் இடம்பெறுவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.