தேடப்படும் சந்தேக நபருக்கு பேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்பிய அமெரிக்க பொலிஸார்!!

333

facebook

கொள்ளைச் சம்­ப­வ­மொன்று தொடர்­பாக தேடப்­பட்ட சந்­தேக நபர் ஒரு­வ­ருக்கு அமெ­ரிக்க பொலிஸார் பேஸ்புக் மூலம் தகவல் அனுப்­பி­யுள்ளனர்.

பென்­சில்­வே­னியா மாநி­லத்தின் பிரிட்ஜ்­விலே நகர பொலி­ஸாரே இந்த உபா­யத்தை பின்­பற்றியுள்ளனர். வர்த்­தக நிலை­ய­மொன்றில் இடம்­பெற்ற கொள்ளைச் சம்­பவம் தொடர்­பாக, 32 வயதான ரொபர்ட் வட்கின்ஸ் என்­பவர் பொலி­ஸாரால் தேடப்­பட்டார். இதை­ய­டுத்து, அவர் தலைமறைவானார்.

இந்­நி­லையில், பேஸ்புக் மூலம் ரொபர்ட் வட்­கின்­ஸுக்கு மெசேஜ் அனுப்­பு­வ­தற்கு பிரிட்ஜ்­விலே நகர பொலிஸார் தீர்­மா­னித்­தனர். ‘சம்­பவம் நடை­பெற்ற இடத்தின் கண்­கா­ணிப்பு வீடியோ மூலம் உம்மை நாம் இனங்­கண்­டுள்ளோம்.

உம்மை நாம் கண்­டு­பி­டித்­து­வி­டுவோம்’ என தெரி­வித்த பொலிஸார், ரொபர்ட் வட்­கின்ஸின் சில புகைப்­ப­டங்­க­ளையும் வெளி­யிட்­டனர். எனினும், நேற்­று­ முன்­தி­னம்­ வரை ரொபர்ட் வட்கின்ஸ் கைது செய்­யப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.