காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்!!

663

food1

காலைப் பொழுதே பலருக்கும் தேநீரில் தான் விடியும், ஆனால் ஒரு சில உணவுகளை காலையில் எழுந்தவுடனே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

ஏனெனில் நாம் சாப்பிடும் உணவுகளில் அதன் அமிலங்களின் தன்மை அதிகமாக இருப்பதால் அது இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் கலந்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

சோடா

சோடாவில் கார்போனேட்டட் அசிட் அதிகமாக உள்ளது. எனவே இந்த சோடாவை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. ஏனெனில் சோடாவானது, நமது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்து வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

தக்காளி

தக்காளியில் அசிட் உள்ளதால், இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தக்காளியில் இருக்கும் அசிட்டானது, இரைப்பையில் சுரக்கும் அசிட்டுடன் கலந்து கரைக்க முடியாத கற்களை வயிற்றில் உருவாக்குகிறது.

மாத்திரைகள்

மாத்திரைகளை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, மாத்திரையானது, நமது வயிற்றில் உள்ள படலத்தை அரித்து, வயிற்றில் சுரக்கும் அமிலத்துடன் கலந்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அல்கஹால்

அல்கஹால் பொதுவாக ஆரோக்கியமற்றது. அதிலும் அதை வெறும் வயிற்றில் குடித்தால், அல்கஹாலில் இருக்கும் சேர்மங்கள் நமது வயிற்றின் படலத்தை அரித்து, எரிச்சலை ஏற்படுத்துகிறது.

கோப்பி மற்றும் டீ

பொதுவாக கோப்பி மற்றும் டீ ஒரு ஆபத்தான பானமாகும். ஏனெனில் கோப்பி மற்றும் டீயில், காபின் என்னும் வேதிப் பொருள் நமது உடலின் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்காமல், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் குடிப்பது மிகவும் சிறந்தது.

தயிர்

தயிரில் நல்ல பக்டீரியாக்கள் இருந்தாலும் நாம் அதை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் தயிரில் உள்ள பக்டீரியாக்கள் நமது வயிற்று படலத்துடன் சேர்ந்து வினை புரிந்து வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.