கொத்து கொண்டு வருவதில் தாமதம் : மூவர் வைத்தியசாலையில், ஒருவர் கைது!!

534

kothu

மொனராகலை நகர் உணவகம் ஒன்றில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

உணவை (கொத்து) வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடே முரண்பாட்டுக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட மொணராகலை பொலிஸார் தற்போது ஒருவரைக் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரை நாளை மொணராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.