ஜெயலலிதா மரணம் குறித்து மோடியிடம் அதிரடி கேள்விகளை எழுப்பிய கௌதமி- கிளம்பிய சர்ச்சை!!

541


ஜெயலலிதாவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் நடிகை கௌதமி அன்றைய தினம் எப்படி கண்ணீர் விட்டு அங்கிருந்து நகர்ந்தார் என்பதை எல்லோரும் பார்த்திருப்போம்.இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல அதிரடி கேள்விகளை முன் வைத்துள்ளார்.

இதில் குறிப்பாக ’அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மறைந்த நாள் வரை ஏன் யாரையும் பார்க்க விடவில்லை? ஏன் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் ரகசியமாக உள்ளன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா?’ என கேட்டுள்ளார்.