நுவ­ரெ­லி­யா குதிரையோட்டத்தில் முதல் தடவையாக பெண்!!

681

நத்தார் பண்­டிகைக் கால கொண்­டாட்­டதை முன்­னிட்டு றோயல் டேர்வ் க்ளப் நுவ­ரெ­லி­யாவில் ஏற்­பாடு செய்­துள்ள குதி­ரை­யோட்டப் போட்­டியில் நத்தார் தாத்­தாவின் பிரசன்­னத்­துடன் நடை­பெ­ற­வுள்­ளது.

நுவ­ரெ­லியா குதிரைப் பந்­தயத் திடலில் நடை­பெறும் குதிரை ஓட்டப் போட்­டி­யின் போது நத்தார் தாத்தா சிறு­வர்­க­ளுக்கு இனிப்புப் பண்­டங்­க­ளுடன் பரி­சு­களை வழங்­க­வுள்­ளமை விடேச அம்­ச­மாகும்.

முதல் தட­வை­யாக பெண் குதி­ரை­யோட்டி ஒருவர் பங்­கு­பற்­ற­வுள்ளார். இந்­தி­யாவைச் சேர்ந்த என்.ரூபா என்ற பெண் குதி­ரை­யோட்டி ஆண்­க­ளுக்கு இணை­யாக குதி­ரை­யோட்டப் போட்­டியில் பங்குபற்றவுள்ளார்.

ஆண்­க­ளுடன் பெண்­களும் ஈடு­கொ­டுத்து குதி­ரை­யோட்­டத்தில் பங்கு­பற்ற முடியும் என்­பதை இதன் மூலம் றோயல் டேர்வ் க்ளப் நிரூ­பிக்­க­வுள்­ள­தென பதில் நிறை­வேற்கு அதி­கா­ரியும் குதி­ரை­யோட்டி (ஜொக்கி) பயிற்­று­ந­ரு­மான சின்­கி­ளயார் மார்ஷல் தெரி­வித்தார்.

டிசம்பர் மாதம் 11ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள குதி­ரை­யோட்டப் போட்­டி­க­ளின்­போது பெறப்­படும் வசூல் அனைத்­தையும் புற்­றுநோய் பரா­ம­ரிப்பு அறக்­கட்­ட­ளைக்கு எட்வர்ட்ஸ் தம்­ப­தி­யினர் அன்­ப­ளிப்பு செய்வர் என்­பதை றோயல் டேர்வ் கிளப் பிர­தி­நிதி உறுதி செய்தார்.

இதே­வேளை இந்த அன்­ப­ளிப்பை புற்­றுநோய் பரா­ம­ரிப்பு அறக்­கட்­டளை பொறுப்­பாளர் டாக்டர் சமதி பெற்­றுக்­கொள்வார். இத­னைவிட தீபிகா ஜயக்­கொடி தனது பரி­சுப்­ப­ணத்தில் 50 வீதத்தை நுவ­ரெ­லியா போனிக் குதிரை சங்­கத்­துக்கு நன்­கொ­டை­யாக வழங்க இணங்­கி­யுள்ளார்.

கவர்ச்­சி­க­ர­மான தொப்பி, மிகச் சிறப்­பாக ஆடை­ய­ணிந்த பெண், சிறந்த தம்­ப­திகள், மிகச் சிறப்­பாக ஆடை­ய­ணிந்த சீமான் ஆகி­யோ­ருக்கு 10 இலட்சம் ரூபா பணப்­ப­ரிசு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

குதி­ரை­யோட்டப் போட்­டி­களை கொண்­டாட்டம் மிகுந்த விழா­வாக நடத்துவதற்கான சகல ஏற்­பா­டு­களும் பூர்த்தி அடைந்துள்ளதாக றோயல் டேர்வ் கிளப் தலைவர் சுரஞ்சித் பிரேமதாச தெரிவித்தார். அடுத்த வருட குதிரையோட்டப் போட்டிகள் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகி மார்ச், ஏப்ரல் மாதங்கள் வரை தொடரும்.