வவுனியா பூங்கா வீதியிலிருக்கும் வவுனியா வளாகத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் ஜி.வசந்சீலனின் மூன்றாம் விதி குறும்படம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் திரு. ஞா.குணசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோதரலிங்கம், வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி. த.மங்களேஸ்வரன், மிருக வைத்தியர், தமிழ்மாமன்றத் தலைவர் திரு.கிருபானந்தகுமார், தமிழருவி சிவகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாமன்றத் தலைவரிடம் இருந்து குறும்படத்தின் முதற் பிரதியை வவுனியா வளாக முதல்வர் பெற்றுக்கொண்டார்.
சிறுவர் நலம் எனும் தொனிப் பொருளில் மனநல மருத்துவர் சிவதாஸ் உரையாற்றினார். குறும்பட விமர்சனத்தினை தமிழருவி சிவகுமாரன் நிகழ்த்தியிருந்தார். ஈழத்துச் சினிமா எனும் பொருளில் குறும்பட இயக்குநர் மதிசுதா உரையை நிகழ்த்தியிருந்தார்.
கலந்து கொண்டவர்களுக்கு குறும்படத்தின் சிறப்பு காட்சி காண்பிக்கப்பட்டது.





























