வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் தப்பி ஓட்டம்!!

757

வவுனியா பொது வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று(10.122016) வைத்தியசாலை காவலில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்த பெண்ணை பொலிஸார் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணுக்கு மருத்துவ அறிக்கையினைப் பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் வைத்தியசாலையில் உள்ள பொலிஸாரின் காவலில் இருந்த இந்த பெண் எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.