500 கிலோ எடை கொண்ட எகிப்தியப் பெண்ணுக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை!!

269

உலகின் அதிக எடை கொண்ட, எகிப்தைச் சேர்ந்த பெண், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

36 வயதான எமான் அஹமத் அப் எல் ஆதி என்ற எகிப்திய பெண் 500 கிலோ எடை கொண்டவராக உள்ளார்.

மும்பையில் உள்ள உடல் பருமனைக் குறைக்கும் அறுவை சிகிச்சை மருத்துவரான (bariatric surgeon) முஃபாசல் லக்டாவாலா அவருக்கு சிகிச்சை அளிக்கவுள்ளார்.

எமான் அஹமத் அப் எல் ஆதி தனியாக எகிப்தில் இருந்து பயணம் செய்ய முடியாத காரணத்தால், கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் முதலில் அவருக்கு விசா கொடுக்க மறுத்தது.

மருத்துவர் முஃபாசல், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிற்கு ட்விட்டர் மூலம் தகவல் அளித்தார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் உடனடியாக பதில் தந்ததும், அந்த நிலை மாறியது.

அதிக உடல் எடை காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் எமான் சிரமப்பட்டு வருகிறார்.

இதுவரை அதிக உடல் எடை கொண்ட பெண்ணாக கின்னஸ் சாதனை புத்தகப்படி நம்பப்படும் பாலின் பாட்டர் என்பவரின் எடை 292 கிலோ ஆகும்.

எமானின் மருத்துவ அறிக்கை மற்றும் புகைப்படங்களைப் பார்க்கும் போது, அவரின் எடை குறைந்த பட்சமாக 450 கிலோவாக இருக்கும் என்று தான் நம்புவதாக மருத்துவர் முஃபாசல் பிபிசி க்கு தெரிவித்துள்ளார்.
மருத்துவர் முஃபாசல், இந்தியாவின் மத்திய அரசு அமைச்சர்களான நிதின் கட்கரி மற்றும் வெங்கய்ய நாயுடு ஆகியோருக்கு உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.