இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் பேட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்டே மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ஓட்டங்கள் எடுத்தது.
நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 451 ஓட்டங்கள் குவித்தது. விராட் கோஹ்லி 147 ஓட்டங்களுடனும், ஜெயந்த் யாதவ் 30 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று தொடங்கிய 4ம் நாள் ஆட்டத்தில் விராட் கோஹ்லியும் ஜெயந்த்யாதவும் தொடர்ந்து விளையாடினார்கள்.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோஹ்லி 302 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 53வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3வது இரட்டை சதமாகும்.






