வவுனியா நெடுங்கேணியில் 32 வருடங்களின் பின்னர் காய்த்த முரளிப்பழம் : அச்சத்தில் கிராமமக்கள்!!

1479

 
நெடுங்கேணி ஒலுமடு கிராமத்தில் முரளி மரம் பளுத்துள்ளது. ஒரு பகுதியினர் அச்சத்திலும், ஒரு பகுதியினர் சந்தோசத்திலும் பழத்தினை பிடுங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

இப்படியான ஓர் சம்பவம் 1984ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. அக் காலப்பகுதியில் மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டார்கள்.

அதன் பின்னர் முப்பத்திரண்டு ஆண்டுகளின்பின்னரே இப்படியான ஓர் சம்பவம் 2016ம் ஆண்டு இம் மாதமே அதிகப்படியான பழம் காய்த்துள்ளது. அதனால் இப் பகுதிவாழ் மக்கள் ஒரு பகுதியினர் அச்சத்தில் வாழ்ந்து வருகின்ற வேளை ஒரு பகுதியினர் பழங்களை பிடுங்கி விற்பனை செய்தும் வருகின்றனர்.

சிலர் பழங்களை பிடுங்குவதற்காக மரம் அறுக்கும் கருவியை பயன்படுத்தி மரங்களை அறுத்து விழுத்துவதனால் அவ்விடத்தில் பொலிசார் சென்று மரத்தை வெட்ட தடை விதித்துள்ளனர்.

மக்கள் பழங்களை பிடுங்கி ஒரு கிலோகிராம் 160 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை விற்பனை செய்து வருகின்றார்கள்.

பல பிரதேசங்களில் வருகைதரும் மக்கள் பழங்களை பிடுங்கி சாப்பிடுகின்றார்கள். காஞ்சிர மோட்டை வயல் பிரதேசம், முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதிகளிலும் முரளிப்பழம் காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.