வவுனியாவில் திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி!!

1662

 
வவுனியா ஹொறவபொத்தான சந்தியில் நேற்று (13.12.2016) மதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டது.

முச்சக்கரவண்டியினை ஓட்டுநர் நிறுத்திவிட்டு வியாபார நிலையத்திற்குச் சென்ற சற்று நேரத்தில் திடீரென தீப்பற்றிக் கொண்டது.

இதனால் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது. இச் சம்பவத்தில் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.