வடமாகாண கல்வித்திணைக்களத்தின் செயல்பாட்டால் ஏமாற்றத்துக்குள்ளான ஆரம்ப பிரிவு மாணவர்கள்! போட்டி நிகழ்ச்சியை காட்சி நிகழ்ச்சியாக்கிய அதிகாரிகளின் அசமந்தம்!

624


வடமாகாண கல்வித்திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஆரம்பக்கல்வி மாணவர்கள் உளப்பாதிப்பிற்குட்பட்டுள்ளனர். என எமது இணையத்துக்கு வந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி கல்வித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை  கருத்தில் கொண்டு இந்த  செய்தி பிரசுரிக்கப்படுகின்றது.ஆரம்பக்கல்வி மாணவர்களிடம் திறண்களை வளர்க்கும் நோக்கில் வருடம்தோறும் திறண்விருத்திப்போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கான போட்டிகள், போட்டிவிதிகள் ,போட்டிக்கான திகதிகள் அடங்கிய சுற்றுநிருபம் வருடஆரம்பத்திலேயே சகல ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டு அறிவுறுத்தல்களும் வழங்கப்படும்.

ஆனால் இவ்வாண்டு அவ்வாறான ஏற்பாடுகளைச்செய்ய மாகாண ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் முன்வரவில்லை. இவ்வாறான அதிகாரிகளின் அசமந்தப்போக்கு ஆரம்பக்கல்வி மாணவர்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. ஒவ்வொரு  வருடமும் நடத்தப்பட்டு வந்த ஓரிரு போட்டிகளை இவ்வாண்டு நாடாத்தியதுடன் அதனையும் சீராக நடத்தவில்லை என ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஆதங்கப்படுகின்றனர்.கடந்த புதன்கிழமை 07.12.2016.அன்று கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடை பெற்ற சிறுவர்அரங்க நிகழ்வு தக்க சான்றாக அமைந்துள்ளது.


இதுவரைகாலமும் போட்டி நிகழ்வாக நாடாத்தப்பட்ட சிறுவர் அரங்கு ஆரம்பக் கல்வி மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வில் மேடையேற்றப்பட்டு பரிசில்களும், பங்குகொண்டமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


கோட்டம் மற்றும் ,வலய மட்டத்தில் போட்டியாக நடத்தப்பட்ட நிகழ்வு மாகாணமட்டத்தில் போட்டி நிகழ்வாக நடாத்தாது காட்சியாக மேடையேற்றியமை குறித்து அங்கு வருகைதந்திருந்த அதிபர்கள்  ஆசிரியர்கள் சிலர்  தமக்குள் ஆதங்கப்பட்டனர்.

பன்னிரண்டு வலயங்களின் பன்னிரண்டு நாடகங்களும் சுமார் பி.ப.3.30 மணிக்கே நிறைவடைந்தன. இறுதியாக நடைபெற்ற நாடகத்தை தமது பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர்களும் அதிகாரிகள் ஒருசிலருமே கண்டுகளித்தனர்.

சிறுவர்நாடகம் போட்டியாக நடத்தப்பட்டால் சிறுவர்கள் உளப்பாதிப்பிற்குள்ளாவார்கள் என்றால் சித்திரம், விரைவுகணிதம், வினாடிவினா போன்ற நிகழ்ச்சிகள் போட்டியாக நடாத்தப்பட்டு அதேமேடையில் அவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் அணிவிக்கும்போது நாடகத்தில் பங்கு கொண்டபன்னிரண்டு வலயங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் உள்ளம்பாதிப்படையும்.


 சித்திரம்,விரைவுகணிதம்,வினாடிவினா என்பன மாகாணமட்டத்தில் போட்டியாக நடாத்தி சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கலாம் என்றால்  சிறுவர்நாடம்  ஏன் போட்டியாக நடாத்தக்கூடாது.

 

நாடகம் காட்சியாக நடைபெறுமென எந்தப் பாடசாலைக்கும் அறிவிக்கவில்லை. ஒவ்வொருநாடகமும் நிறைவடைய பரிசில் வழங்கியமையால் மண்டபத்தில் சொற்ப பார்வையாளர்களுடன் தமது பிள்ளைகள் நாடகத்தை நிகழ்த்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலையுடன் தெரிவித்தனர்.

 போட்டிக்காக. தினக்கூலிக்குவேலைசெய்யும் நாங்கள் பெருந்தொகைப்பணத்தை செலவுசெய்து வந்த எமக்கு பெரும் ஏமாற்றமாக போய்விட்டது  என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

நிகழ்வுக்கு இடையில்வந்த மாகாணக்கல்விப் பணிப்பாளர் இறுதி வரை நின்று நிகழ்வுகளைப்பார்க்கவில்லை.

நிகழ்வுகள் 9.00தொடங்கி 3.30வரை நடைபெற்றபோதும் மதிய உணவு வழங்கப்படவில்லை சிற்றூண்டி மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

வடமாகாண கல்வித்துறையில் அக்கறையுள்ள வடமாகாண   கல்வித்  திணைக்களமே! வடமாகாண கல்வி அமைச்சே!  இதுபோன்ற பொறுப்பற்ற ஏற்பாடுகளுக்கு  யார் பொறுப்பு கூறப்போகிறீர்கள்.

 மாணவர்களின்  திறன்களை விருத்தி செய்வதற்கென ஒதுக்கப்படும்  நிதியினை வினைத்திறனாக    பயன்படுத்த    உங்களுக்கு  பயிற்சி அளிக்க யார்  வரப்போகிறார்கள் !பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

* வாகீசன்*