கத்தியால் குத்தப்பட்ட நபர் ஒருவர், தலைக்குள் ஊடுருவிய கத்தியுடன் வைத்தியசாலைக்குச் சென்ற சம்பவம் தென் அமெரிக்க நாடான பெருவில் இடம்பெற்றுள்ளது.
கெம்போஸ் ஒயார்ஸ் எனும் 28 வயதான இளைஞர் டெக்ஸி சாரதியாக பணியாற்றுபவர். இவரை ஹென்றி சல்டனா சௌஸா எனும் நபர் கத்தியால் குத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தின்போது கெம்போஸ் ஒயார்ஸின் தலையின் பின்புறம் கத்தி ஊடுருவியது. எனினும், கத்தி தலையிலிருந்த நிலையிலேயே அவர் வைத்தியசாலைக்கு நடந்துசென்றார்.
பல மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் ஒயார்ஸின் தலையிலிருந்து அக்கத்தி அகற்றப்பட்டது.






