மகளின் திருமணப் பரிசாக ஏழைகளுக்கு 90 வீடுகளைக் கட்டிக்கொடுத்த தொழிலதிபர்!!

1454

இந்தியாவின் மராட்டியத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்தை முன்னிட்டு 90 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

மராட்டியத்தின் அவுரங்கபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய் முனாத் என்பவரே தன் மகளின் திருமணப் பரிசாக வீடற்றவர்கள் 90 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

ஆடை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அஜய், சுமார் 1.5 கோடி செலவில் இந்த வீடுகளை நிர்மாணித்துள்ளார்.

சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகளைப் பெறுபவர்கள் ஏழையாக இருக்க வேண்டும், குடிசையில் வசிப்பவராக இருக்க வேண்டும், போதைக்கு அடிமையாகாதவராக இருக்க வேண்டும் எனும் மூன்று நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையிலேயே பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தனது மகளின் திருமண வைபவத்தை சிறப்பிக்க, இந்த தந்தை மேற்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது.