வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா!!

698

 
தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா வவுனியாவில் இன்று (15.12.2016) காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உள்ளுராட்சி உதவி அணையாளர் திரு. அசங்க காஞ்சன குமார, சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் எம்.இராதாகிருஸ்ணன், திருமதி.சுகந்தி கிஸோர்(வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை அரம்பித்து வைத்தனர்.

இன் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள், மாற்றுத்திறனாளி மாணவர்களின் நடனம் போன்றன இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இறுதியில் சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. நிகழ்வில் அதிபர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.