வவுனியா ஓமந்தையில் மரக்கடத்தில் இளைஞன் கைது!!

533

 
வவுனியா ஒமந்தை கல்லுப்போட்டகுள காட்டுப்பகுதியில் இன்று (15.12.2016) காலை. 7.30 மணியளவில் மரக்கடத்திலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா ஒமந்தை அலைகல்லுபோட்டகுளத்திலிருந்து இன்று (15.12.2016) காலை 7.30மணியளவில் 42 பனை மரக்குற்றிகளை ஒமந்தைக்கு கடத்த முற்பட்ட சமயத்தில் ஒமந்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 26 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்திய போது 28.12.2016ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இம் மரக்குற்றிகளின் பெறுமதி ஒன்றரை லட்சமென பொலிஸார் தெரிவித்தனர்.