இம்ரான்கான் போல டோனி கவர்ச்சியானவர் இல்லை : அக்தர்!!

772

dhoni

சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகின் முன்னணி ஆட்டக்காரர்களை ஒரு காலத்தில் தனது அதி வேகப்பந்து வீ்ச்சால் மிரட்டியவர் சொய்ப் அக்தர்.

இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கார் யூனுஸ் ஆகியோரின் வாரிசாக கருதப்பட்ட அவர் தனது முரட்டுத்தனத்தால் புகழை இழந்து அதால பாதாளத்திற்குப் போய் தற்போது கிரிக்கெட்டிலிருந்தே ஒதுக்கப்பட்டுவிட்டார்.

இந்நிலையில் இந்திய அணித்தலைவர் டோனியை முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் இம்ரான் கானுடன் ஒப்பிட்டுள்ளார் அக்தர்.
இது குறித்து அவர் கூறுகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய பெரும் முன்னேற்றத்திற்கு ஐ.பி.எல் காரணம் இல்லை.

டோனி என்ற ஒரே ஒரு நபர்தான் இதற்குக் காரணம். இம்ரான் கானைப் போல கவர்ச்சிகரமானவராக டோனி இல்லாமல் இருக்கலாம். ஆனால், இம்ரானிடம் உள்ள அத்தனை குணங்களும் டோனியிடம் உள்ளது.

ஒரு வீரராக மட்டுமல்லாது அணித்தலைவராகவும் கலக்கியவர் இம்ரான். அதேபோலத்தான் டோனியும் பிரமாதமாக செயல்படுகிறார் என்றும் இருவரும் தங்களது வாழ்க்கைக்கும் தாங்கள் ஆடிய அணிக்கும் புது அர்த்தம் புது வாழ்வுகொடுத்தவர்கள் எனவும் கூறினார்.