வவுனியா செட்டிகுளம் மக்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!!

517

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை என்று உண்ணாவிரதம் மேற்கொண்ட மக்கள் உண்ணாவிரதத்தினைக் கைவிட்டுள்ளனர்.

இன்று(15.12.2016) காலை 8.30 மணிமுதல் வவுனியா செட்டிகுளம் பகுதியில் வீட்டுத்திட்டத்தில் அரச அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும் தற்போது கிடைத்த வீட்டுத்திட்டத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உண்ணாவிரத்தினை மேற்கொண்டனர்.

எனினும் இன்று இரவு 8 மணியுடன் உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டவர்கள் தமது உண்ணாவிரத்தினைக் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

செட்டிகுளம் பிரதேச செயலாளருடன் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடுத்து கிடைக்கவிருக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடுகள் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளர் உண்ணாவிரத்திலிருக்கும் பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களுடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் செய்தியினை தெரிவித்ததையடுத்து அமைச்சருடன் உண்ணாவிரதத்திலிருக்கும் மக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அமைச்சர் வாக்குறுதியளித்ததையடுத்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்கள் தமது உண்ணாவிரத்தினைக் கைவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்தி  : வவுனியா செட்டிகுளம் மக்கள் தீர்வு கிடைக்குவரை உண்ணாவிரதப் போராட்டத்தில்!!