வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் உதவிகள்!!

599

 
வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்து கொண்ட முன்னாள் போராளிகளுக்கு இன்று (16.12.2016) வவுனியா நகரசபை மைதானத்தில் வைத்து அவர்களின் சுயதொழில்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர்நிர்மானம் மற்றும் புனர்வாழ்வு காரியலாயம் மூலமாக வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தையல் இயந்திரங்கள், கோழிக்குஞ்சுகள் சுயதொழிலுக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் ஆலோசனைகளுக்கு அமைவாக புனர்வாழ்வு பணியகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, பிரிகேடியர் யூ. எஸ்பி.தர்சனலியனகே, சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹக புஸ்பகுமார ஆகியோர் கலந்து கெண்டனர்.

இந்துமத அலுவல்கள் அமைச்சின் அனுரசணையின் கீழ் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்து கொண்டவர்களுக்கிடையிலான வவுனியா, மனனார், மாவட்டக் கழகங்களுக்கிடையிலான நட்புறவினை மேம்படுத்தும் வகையில் காற்பந்தாட்ட இறுதிப் போட்டியும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் இறுதியாக மூன்று முன்னாள் போராளிகளும் ஒருவருட புனர்வாழ்வுப் பயிற்சி பெற்ற செல்லப்பா சிவநாதன் வயது 43 மட்டக்களப்பு, தியாகராசா முரளிதரன் வயது 31 அம்பாறை, கணபதிப்பிள்ளை அமரசிங்கம் வயது 38 வாழைச்சேனை ஆகிய போராளிகள் இன்று சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.