டெல்லியில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி தலைநகர் டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நினைவு நாளை அனுசரிக்க உள்ள நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது.
நொய்டாவில் இருந்து இளம்பெண் ஒருவர் வேலை தேடுவதற்காக டெல்லி சென்றுள்ளார்.
அவர் வீட்டிற்கு செல்ல டாக்சிக்கு காத்திருந்த போது காருடன் வந்த நபர் ஒருவர் வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக அந்த பெண்ணிடம் கூறி அழைத்துச் சென்றார்.
அந்த பெண் காரில் ஏறியதும் காரை டிரைவர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஓட்டியுள்ளான். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி அவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
பாதிக்கப்பட்ட பெண் உதவி கேட்டு கத்தியபோது குறித்த நபர் பயந்து ஓடிவிட்டான். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த பொலிசார் பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை அதிகாரிக்கு சொந்தமான காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.






