பசு மீது துப்பாக்கிச் சூடு : துப்பாக்கி கண்டுபிடிப்பு!!

672

 
கன்றுத்தாச்சிப்பசுவொன்று இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் அக்கரைப்பற்று சாகாமப்பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சாகாமத்திற்கும் முரணாவட்டைக்கும் இடைப்பட்ட வெளியில் இச்சம்பவம் நேற்று அதிகாலை சம்பவித்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

வேளாண்மையை மேய்ந்ததாகக்கூறி இப்பசு சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் விவசாயிகள் கால்நடைப்பண்ணையாளர்களிடையே முரண்பாடு வலுப்பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

இது தொடர்பில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜே.ஹேரத் ஸ்தலத்திற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அங்கு அவர் கால்நடையாளர் சங்கத்தலைவர் அ.முருகன், செயலாளர் சோ.புஸ்பராசா மற்றும் மிருகவைத்திய அதிகாரியையும் வரவழைத்திருந்தார்.

சற்றுநேரத்தில் விசேட அதிரடிப்படையினரின் துணைகொண்டு அப்பகுதியில் தேடுதல் நடாத்தப்பட்ட போது அங்கு சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும், ரவையும் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பாக தமது கண்டனத்தைத் தெரிவிப்பதாக கால்நடை பாற்பண்ணையாளர் சங்கச்செயலாளரும் முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினருமான சோ.புஸ்பராசா தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசசெயலாளருக்குட்பட்ட பிரதேசத்திலமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான வட்டமடு மேய்ச்சல்தரையை பிரதேசசெயலாளர் காப்பாற்றித்தர வேண்டுமென அவர் மேலும் கேட்டுள்ளார்.