வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்!!

947

வவுனியாவில் கடந்த (13.12.2016) இரவு 8 மணியளவில் இராசேந்திரன்குளம் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் (அகிலேஸ்வரன் வயது 35, பிரியதர்சினி வயது 30, திஷா வயது 05, திஷாளன் வயது 02) படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் அவசர சிகிச்சை பெற்று வந்த அகிலேஸ்வரன் என்ற குடும்பத்தலைவர் நேற்று (17.12.2016) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம்!!