வைத்தியசாலை உணவில் செத்த குட்டி பாம்பு : அதிர்ச்சியில் மக்கள்!!

1343

dead

கேரளாவில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு பெண்மணி உடல் நலமில்லாத தனது மகனை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.

அங்குள்ள உணவு விடுதியில் அவர் தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்தார். அந்த உணவை திறந்து பார்த்தால் அதில் ஒரு குட்டி பாம்பு செத்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ந்துபோனார். இது தொடர்பாக அவர் வைத்தியசாலை நிர்வாகத்திடம் புகார் செய்தார்.

தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த உணவு விடுதி முன்பாக கூடி போராட்டம் நடத்தினர். உடனே பொலிஸாருக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வைத்தியசாலை நிர்வாகம் புகார் செய்தது. அவர்கள் விரைந்து வந்தனர்.



பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தி சம்பந்தப்பட்ட உணவு விடுதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் கூட்டம் கலைந்து சென்றது.

அதைத் தொடர்ந்து அந்த உணவு விடுதியை மூட உத்தரவிடப்பட்டது. அங்கிருந்து சர்ச்சைக்குள்ளான உணவு மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.