மகனின் சிகையலங்கார விவகாரத்தால் வேலையை ராஜினாமா செய்த நபர்!!

651

பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மகனின் சிகை­ய­லங்­காரம் கார­ண­மாக தனது வேலையை ராஜி­னாமா செய்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறு­கிறார்.

வட­மேற்கு லண்­டனில் வசிக்கும் கிறேக் இமா­னுவேல் (37), லூஸி தம்­ப­தியின் 7 வயது மக­னான மெக்­கன்ஸி உள்ள ஆரம்பப் பாட­சா­லை­யொன்றில் கல்வி கற்று வரு­கிறான்.

அண்­மையில் மெக்­கன்ஸி தலை­மயிர் வெட்­டிக்­கொண்ட பின்னர் பாட­சா­லைக்குச் சென்­ற­போது பாடசாலை அதி­கா­ரிகள் மேற்­படி சிகை­ய­லங்­கா­ரத்­துக்கு ஆட்­சேபம் தெரி­வித்­தி­ருந்­தனர்.

மெக்­கன்­ஸியின் தலையில் ஒரு புறத்­தி­லுள்ள மயிர் மழிக்­கப்­பட்டு இருந்­தது. கிறேக் இமானுவேலையும் அவரின் மனைவி லூஸி­யையும் பாட­சா­லைக்கு அழைத்த அதி­கா­ரிகள், இத்தம்பதியின் மகனின் இச் ­
சி­கை­ய­லங்­காரம் பாடசாலை மாண­வ­னுக்குப் பொருத்­த­மா­ன­தல்ல, இது ஏனைய மாண­வர்­களின் கவ­னத்தை திசை­தி­ருப்பும் எனவும் தெரி­வித்­தனர்.

இதனால் மெக்­கன்­ஸியை வீட்­டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அதி­கா­ரிகள் கூறினர். மெக்கன்ஸியின் தலை­மயிர் மீண்டும் வளர்ந்த பின்­னரே அவனை மீண்டும் வகுப்­ப­றைக்கு அனுமதிக்க முடியும் என அதி­கா­ரிகள் கூறினர்.

இதனால் தனது மகனை முறை­யாக பரா­ம­ரித்து அவன் மீண்டும் பாட­சா­லைக்குச் செல்­வதை உறுதிப்ப­டுத்­து­வற்­காக, தனது தொழிலை ராஜி­னாமா செய்­துள்­ள­தாக கிறேக் இமா­னுவேல் தெரிவித்துள்ளார்.

நிறு­வ­ன­மொன்றின் களஞ்­சி­ய­சா­லை­யில் பணி­யாற்ற ஆரம்­பித்து 5 நாட்­களில் தான் இத்­ தீர்­மா­னத்தை மேற்­கொண்­ட­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். “நான் அண்­மை­யி­லேயே அங்கு பணி­யாற்ற ஆரம்பித்தேன்.

எனவே எனக்கு அதிகம் அறி­முகம் இல்­லாத சக ஊழியர்களுடன் பேசி எனது வேலைநேரத்தை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. எனவே எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன்” என்கிறார் கிறேக் இமானுவேல்.