சிலி நாட்டின் பொரு­ளா­தார அமைச்­ச­ருக்கு பாலியல் பொம்மை பரி­ச­ளிக்­கப்­பட்­ட­மையால் சர்ச்சை!!

837

சிலி நாட்டின் பொரு­ளா­தார அமைச்­ச­ருக்கு வர்த்­த­கர்­களின் சங்­க­மொன்­றினால் பாலியல் பொம்மையொன்று அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிலியின் உற்­பத்­தி­யா­ளர்கள் மற்றும் சேவை ஏற்­று­ம­தி­யா­ளர்கள் சங்­கத்தின் வரு­டாந்த இராப்­போ­சன விருந்து வைபவம் தலை­நகர் சன்­டி­யா­கோவில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்ட சிலி பொரு­ளா­தார அமைச்சர் லூயிஸ் செஸ்­பெ­ட­ஸுக்கு மேற்­படி சங்கத்­தின் சார்பில் பிர­பல வர்த்­தகர் ஒருவர் பாலியல் பொம்­மை­யொன்றை அன்­ப­ளிப்­பாக வழங்கினார்.

காற்­ற­டைக்­கப்­ப­டக்­ கூ­டிய, ஆளு­ய­ர­மான இந்த பாலியல் பொம்­மையை, “பொரு­ளா­தா­ரத்தை முன்னேற்­றத்தை தூண்­டு­வ­தற்­காக” வழங்­கு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இச்­சங்­கத்தின் வரு­டாந்த இராப்­போ­சன விருந்தில் கலந்­து­ கொள்ளும் பிர­மு­கர்­க­ளுக்கு வேடிக்கையான பரி­சு­களை வழங்­கு­வது வழக்­க­மா­க­வுள்­ளது.  எனினும், அமைச்சர் ஒரு­வ­ருக்கு பாலியல் பொம்மை வழங்­கப்­பட்­டமை சமூக வலைத்­த­ளங்­களில் விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

சிலியின் ஜனா­தி­பதி மிஷெல் பச்­செல்டும் இது குறித்து விமர்­சித்­துள்ளார். இவர் சிலி நாட்டின் முதலாவது பெண் ஜனா­தி­பதி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

“பெண்­க­ளுக்கு மதிப்­ப­ளிப்பது எனது அர­சாங்­கத்தின் முக்­கிய கொள்கை. உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நடைபெற்ற விடயத்தை சகித்துக் கொள்ள முடியாது” என ஜனாதிபதி மிஷெல் பச்லெட் தெரிவித்துள்ளார்.