விடுதலைப்புலிகள் பற்றி அவதூறு : மெட்ராஸ் கபே படத்துக்கு இங்கிலாந்தில் தடை!!

297

madres cafe

மெட்ராஸ்கபே படத்துக்கு இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் ஜோன் ஆபிரகாம் நாயகனாக நடித்துள்ளார். சுஜித் சிர்கார் இயக்கியுள்ளார். விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. 1990ல் இலங்கையில் நடந்த போர் பின்னணியில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் யுத்த நடவடிக்கைகள். ராஜீவ் படுகொலை சதி திட்டம் போன்றவை காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. இந்த படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது என்றும் மீறி திரையிட்டால் தியேட்டர்களில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் தமிழ் அமைப்புகள் எச்சரித்தன.

இதையடுத்து தமிழகத்தில் மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். வடமாநிலங்களில் ரிலீசானது. வெளிநாடுகளிலும் மெட்ராஸ் கபே படத்தை திரையிட ஏற்பாடுகள் நடந்தது. இங்கிலாந்தில் தமிழ் இளைஞர் அமைப்பினர் மெட்ராஸ் கபே படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

படம் திரையிடப்பட இருந்த தியேட்டர்களிலும் முற்றுகையிட்டனர். மெட்ராஸ் கபே படத்தை தடை செய்ய கோஷம் போட்டனர். படத்தின் போஸ்டர்களையும் தீயிட்டு எரித்தார்கள். இதையடுத்து படத்துக்கு அங்கு தடை விதிக்கப்பட்டது. தியேட்டர்களில் மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதை நிறுத்தி விட்டார்கள்.