பழைய நண்பரை மறக்காத விஜய்!!

550

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் தனது நட்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். தற்போது தலைவா படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் ஜில்லா. இப்படத்தை புதுப்பட இயக்குனர் நேசன் இயக்குகிறார். காஜர் அகர்வால், மோகன்லால், மகத், பூர்ணிமா மற்றும் பலர் நடிக்கிறார்.

இதில் வில்லனாக ரவி மரியா நடிக்கிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெற்றி பெற்ற குஷி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். அப்போது விஜயும் இவரும் நீண்ட நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இருவரும் நண்பர்களானார்கள்.

தற்போது ஜில்லா படத்தில் நடிப்பதன் மூலம் இவர்கள் சூட்டிங் இடைவேளையில் நீண்ட நேரம் பேசிக்கொள்கிறார்களாம். இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகும் விஜய் தனது நண்பரை மறக்காமல் அதேபோல் பேசி பழகுகிறார் என்று சூட்டிங் வட்டாரங்களில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.