ஜோதிகாவை இன்னும் காதலிக்கிறேன் : படவிழாவில் நடிகர் சூர்யா!!

510

soorya

இருவர் ஒன்றானால் என்ற பெயரில் புது படம் தயாராகிறது. ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ.எம்.சம்பத்குமார் தயாரிக்கிறார். அன்பு.ஜி இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மாணவ– மாணவிகள் முன்னிலையில் நடந்தது.

நடிகர் சூர்யா விழாவில் பங்கேற்றார். அவருக்கு மாணவர்கள் உற்சாக வர வேற்பு அளித்தனர். பின்னர் பாடல் சி.டி.யை வெளியிட்டு சூர்யா பேசியதாவது..

மாணவ–மாணவிகள் முன்னால் விழா நடப்பது சந்தோஷமா இருக்கு. நான் காலேஜ் முடிச்சி பல காலம் ஆச்சு. உங்களை பார்க்கும்போது மறுபடியும் அந்த ஞாபகம். எனக்கு இன்று திருமண நாள். நிறைய பேர் இங்கு வாழ்த்து சொன்னீங்க. பேஸ் புக்கிலும் எக்கச்சக்கமா வாழ்த்து குவியுது.



இருவர் ஒன்றானால் படக்குழுவினர் முதல் படைப்பாக இதை உங்கள் முன் கொண்டு வர்றாங்க. நீங்க சப்போர்ட் பண்ணனும். இந்த படத்தின் நாயகன் பிரபு நடனம் பயின்று நிறைய நாட்கள் சினிமா கனவோடு இருந்து இப்ப நடிக்க வந்துள்ளார்.

நல்லா நடனம் பண்ணி இருக்கார். நாம் நினைப்பது கிடைக்கும். பிரபுவுக்கும் கிடைச்சிருக்கு. சினிமா சாதாரண விஷயம் இல்லை. வசனம் எப்படி இருக்கனும். பிரேம் எப்படி இருக்கனும். சீன் எப்படி அமையனும். லோக்கேஷன் எங்கு போகனும் என்றெல்லாம் ஒவ்வொரு காட்சிக்கும் நிறைய விவாதம் பண்ணி பிறகு சூட்டிங் போறாங்க.

இருவர் ஒன்றானால் படத்தையும் அப்படித்தான் செதுக்கி இருப்பாங்கனு நம்புறேன். போஸ்டர், பாடல், சீன்கள் எல்லாம் இதில் சிறப்பா அமைசிருக்கு. இந்த படத்தில் இருப்பவர்கள் நல்ல டீம். தயாரிப்பாளர் என்னோட நிறைய படங்களில் வேலை பார்த்து இருக்கார்.

கஜினி படத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. நேருக்கு நேர் படத்தில் அறிமுகமான போது நான் புதுசு. நடனம் ஆடவே தெரியல. என்னை ஆதரித்து இந்த அளவுக்கு உயர்த்தியது போல் இருவர் ஒன்றானால் படக்குழுவினருக்கும் ஆதரவு கொடுங்கனு கேட்டுக்குறேன்.

காதல் படமாக எடுத்து இருக்காங்க. காதல் 14 வயதில் துவங்கி 25 வயதில் முடியுறது இல்ல. ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்த பிறகும் அது குறையக்கூடாது. நான் ஜோதிகாவை மணந்து 7 வருடங்கள் ஆகிறது. காதலித்து 12 வருடங்கள் ஆகிறது.

அந்த காதல் அப்படியேதான் போய்ட்டு இருக்கு. ஒவ்வொரு நாளும் இன்னும் இன்னும் அழகா தெரியுது. காதல் அப்படித்தான் இருக்கனும் பசங்களுக்கு திருமணத்துக்கு பிறகு காதல் குறைஞ்சி போயிடுது என்று பெண்கள் நினைக்கிறார்கள். அப்படி குறைய விடாதீர்கள். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சூர்யா பேசினார்.

விழாவில் டைரக்டர் சரவணன், இந்துஸ்தான் பல்கலைக்கழக இயக்குனர் அசோக்வர்கீஸ், வேந்தர் எலிசபெத் வர்கீஸ், தயாரிப் பாளர்கள் சம்பத்குமார், ரவிக்குமார், ஒளிப்பதி வாளர் குமார்ஸ்ரீதர், இசையமைப்பாளர் குரு கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.