திடீரென வீதியை கடந்த காட்டு யானையால் நேர்ந்த விபரீதம்!!

670


அம்பாறை – கரங்காவ பிரதேசத்தில் திடீரென வீதியை கடந்த காட்டு யானையை பார்த்து பயந்து மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவர் கெப் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம், நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். மேலும், விபத்தில் காயமமைந்துள்ளவர் 35 வயதான அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் முன்னாள் வந்த கெப் வண்டியில் மோதியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, காயமடைந்துள்ளவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.