டியூசன் நடத்தி 30க்கும் மேற்­பட்ட மாண­வி­களை காம இச்­சைக்கு பயன்­ப­டுத்திக் கொண்ட நபர்கள்!!

881


டியூசன் வகுப்பு வைத்து பாட­ம் நடத்தி வந்த மூன்று இளை­ஞர்கள் 30 க்கும் மேற்­பட்ட மாண­வி­க­ளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி வந்தமை வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

தமி­ழ­கத்தின் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (25). டிப்ளோமா கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் (26), மற்றொரு சிவக்குமார் (27).
நண்பர்களான இவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலக்கோடு மற்றும் தர்மபுரி நெசவாளர் கொலனி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக டியூசன் நிலையம் நடத்தி வருகின்­ற­னர்.

இங்கு 10 முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அங்கு மாணவிகளே அதிகளவில் படித்து வந்தனர்.

இந்தநிலையில் டியூசனுக்கு வரும் மாணவிகள் சிலரை மயக்க மருந்து கொடுத்து சிவக்குமார் உட்பட சிலர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.

இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு பொலிஸார் விசாரணை நடத்தினர்.
அந்த விசா­ர­ணையில் தெரிய வந்­த­தா­வ­து, டியூசன் நிலையம் நடத்திய சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்களும் டிப்ளோமா கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்துள்ளனர்.

சரியான வேலை எதுவும் கிடைக்காததால் 3 பேரும் சேர்ந்து அங்கு டியூசன் சென்டர் நடத்த முடிவு செய்தனர். அதன்படி பாலக்கோடு, தர்மபுரி பகுதியில் டியூசன் சென்டரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஆரம்­பித்­தனர்.

அந்த டியூசன் சென்டரில் பாலக்கோடு மற்றும் தர்மபுரி பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்க சேர்ந்தனர். குறுகிய நாட்களில் அதிகளவில் மாணவ மாணவிகள் சேர்ந்ததால் 3 பேரும் 2 சென்டர்களிலும் மாறி மாறி பாடம் நடத்தினர்.

டியூசன் நிலையம் தொடங்கிய சில மாதங்களிலேயே சிவக்குமார் தனது பாலியல் சீண்­டல்­களை ஆரம்­பித்­துள்ளார். அப்போது அழகாக இருக்கும் மாணவிகளுக்கு தனியாக அதிக நேரம் பாடம் சொல்லிக் கொடுப்பது போல நடித்து அவர்களிடம் சிரித்து சிரித்து பழகியுள்­ளார்.

அந்த மாணவிகளை தனியாக டியூசனுக்கு வரவழைத்த சிவக்குமார் அவர்களுடன் நெருங்கிப் பழகியுள்­ளார். அப்போது தனது காம இச்சைக்கு பயன்படுத்த முடிவு செய்த அவர் பாசத்தோடு அவர்களுக்கு வழங்குவது போல டீ மற்றும் குளிர்பானங்களை அடிக்கடி வாங்கி கொடுத்துள்­ளார்.

இதில் சில மாணவிகளுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்­ளார். மாணவிகள் மயங்கி விழுந்ததும் அவர்களிடம் காம இச்­சையை தீர்த்­துக்­கொண்­டுள்ளார். அதனை செல்போன்களில் வீடியோவாக சிவக்குமார் எடுத்துள்­ளார்.

மாணவிகள் மயக்கம் தெளிந்ததும் அவர்களிடம் நைசாக பேசி வீட்டுக்கு அனுப்பியும் வைத்­துள்ளார். பின்னர் சமயம் கிடைக்கும்போது சிவக்குமார் அந்த மாணவிகளை தனியாக அழை த்து தான் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டமை தொடர்பான வீடியோவை காட்டியுள்­ளார்.

அதனை பார்த்து அதிர்ச்சி அடைவதால் மாணவிகள் இந்த ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டியுள்­ளார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகும் மாணவிகளை தன்னுடைய காம இச்சைக்கு சிவக்குமார் அடிக்கடி பயன்படுத்தி உள்ளார். அதனையும் வீடியோவாக படம் பிடித்து தனது நண்பர்களான ஈஸ்வரன் மற்றும் மற்றொரு சிவக்குமாருக்கும் அதனை காட்டியுள்ளார்.

அவர்கள் இரு­வரும் அந்­த ஆபாச வீடியோவை மாணவிகளுடன் காட்டி மிரட்டி மாறி, மாறி உல்லாசமாக இருந்துள்­ள­னர். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் வெளியில் சொல்லப் பயந்து அப்படியே அவர்களின் காம இச்சைக்கு இசைந்துள்ளனர்.

இப்படியாக இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆசிரியர்கள் என்ற போர்வையில் தங்­க­ளது காம இச்­சை க்கு பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இந்த கொடுர சம்பவம் கடந்த இரு வருடங்களுக்கும் மேல் சத்தம் இல்லாமல் அந்த டியூசன் சென்ட ரில் அரங்கேறியுள்­ளது தான் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதனை அங்கு படித்த ஒரு மாணவி தனது பெற்றோரிடம் கூறி­யுள்ளார். இத­னை­ய­டுத்து அவர்கள் பாலக்கோடு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். அதன்பேரில் பொலி­ஸார் நடத்திய விசாரணையிலே இந்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த காம லீலையில் சிவக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்­ளார். மேலும் ஈஸ்வரன் மற்றொரு சிவக்குமாரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்களையும் பொலிஸார் பறி­முதல் செய்­துள்­ள­னர்.

மேலும் இதில் தொடர்புடைய மற்றொரு நபரையும் தேடிவரும் பொலிஸார் தொடர்ந்து இந்த சம்­ப­வ­ம் குறித்து விசாரணை நடத்தி வருகின்­றனர்.