ரஷ்யத் தூதுவர் சுட்டுக்கொலை : படம்பிடித்த புகைப்படக் கலைஞரின் பதற்றமான நிமிடங்கள்!!

264

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் ஆண்ட்ரை கார்லோவ் பலியாகியுள்ளார்.

துருக்கி பொலிஸ் அதிகாரி ஒருவராலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை தனது கெமராவில் பதிவு செய்த அசோசியேட்டட் பிரஸ்ஸின் புகைப்படக் கலைஞர் புர்கான் ஒஸ்பிலிக் தனது ஆபத்தான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

ரஷ்யாவைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி அது. ரஷ்யாவின் கலின்ங் கிராட் நகர் முதல் கம்சாட்கா நகர் வரையான புகைப்படங்கள் அந்தக் கண்காட்சியில் இடப்பெற்றிருந்தன. எனவே, அந்த கண்காட்சியில் நான் கலந்துகொள்ள முடிவு செய்தேன். ஏனெனில், என் அலுவலகத்திற்கு செல்லும் வழியில்தான் அந்தக் காண்காட்சி நடைபெற்றது.

நான் கண்காட்சிக்கு நுழையும் முன்னே அங்கு உரைகள் தொடங்கப்பட்டு விட்டன. அதற்கு பின் ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் தனது உரையைத் தொடங்கினார்.

நான் புகைப்படம் எடுப்பதற்காக அவரது அருகில் சென்றேன். துருக்கி – ரஷ்ய உறவுக்கு உபயோகிக்கப்படும் வகையில் அந்தப் படங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

அதுவரை அவ்விடம் வழக்கமான புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியாகவே அது இருந்தது.

பிறகு திடீரென்று கருப்பு நிற கோட் சூட் அணிந்த அந்த நபர் துப்பாக்கியை வெளியே எடுக்கும்போது நான் திகைத்து நின்றேன். நான் அதனை திரைப்பட காட்சி என்று முதலில் நினைத்தேன்.

குறுகிய முடி வைத்திருந்த அந்த நபர் துப்பாக்கியை எடுத்து துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவை 8 முறைச் சுட்டார். அங்கிருந்த மக்கள் பயந்து அங்கிருந்த மேசைகளுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். நான் சற்று பயந்து குழம்பிய நிலையில் இருந்தேன். இருந்தாலும் நான் சுவருக்கு பின்னால் ஒழிந்துகொண்டு புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். மிக நிதானமாக திட்டமிட்டு இந்தப் படுகொலையை அந்த நபர் செய்தார்.

அதன்பின் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பார்வையாளர்கள் பீதி அடைந்தனர். சுடப்பட்ட ரஷ்ய தூதர் எனக்கு சிறிய தொலைவிலே தரையில் வீழ்ந்து கிடந்தார். அவரது உடலிலிருந்து எந்த இரத்தமும் வெளிவரவில்லை. ஒரு வேளை அந்த நபர் அவரை பின்னால் சுட்டிருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.