கொஞ்சம் பணத்தை பார்ப்பதற்கு சினிமாவுக்கு வந்தேன் : ஹிப் ஹொப் தமிழா ஆதி!!

564

ஹிப் ஹொப் தமிழா ஆதி அடுத்து எடுத்­தி­ருக்கும் அவ­தா­ரத்தில் படு பிஸி. ‘மீசைய முறுக்கு’ முதல் முயற்சி. சோஷியல் மீடி­யாவில் ஹிப்ஹொப் ­பிற்கு அதி­ரி­பு­திரி வெற்­றிதான். ஒரு பக்கம் மியூசிக், இன்­னொரு பக்கம் நடிப்பு என ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரை சவாரி. ‘‘கன­வு­கள்தான் வாழ்க்­கையை அழ­காக்கும்.

கன­வுகள் நிறை­வே­று­கிற வேளை நம்­மையே அழ­காக்கும். மியூசிக் ஆல்பம் பண்­ணும்­போதே நிறைய பேர் என்னை ஹீரோவா நடிக்கச் சொல்லிக் கேட்­டார்கள்.

அப்ப இந்த அள­வுக்கு பக்­கு­வ­மில்லை. எல்­லாமே கூடி வர­ணும்னு நினைச்சேன். இப்ப அதுக்­கான நேரம் வந்­தி­ருக்கு. அதுதான் கம்­பீ­ரமா மீசையை முறுக்­கி­யி­ருக்கேன்…’’ – சந்­தோ­ஷ­மாகப் பேசு­கிறார் ஆதி.

பார­தி­யாரின் படம், அவ­ரது வரிகள். மெசேஜ் சொல்ல கிளம்­பிட்­டீங்­களா ப்ரோ?
அப்­ப­டி­யெல்லாம் இல்ல. காலேஜ் லவ் ஸ்டோரி இது. தனியா மியூசிக் பண்ண ஆரம்­பிச்ச கஷ்­டத்தை ஜாலியா சொல்­லி­யி­ருக்கேன். அது எல்­லா­ருக்கும் போகும். சமூக வலைத்­தள இளை­ஞர்­களை நிறைய அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருக்கேன்.

நீங்க அவங்­களைப் பார்க்­கும்­போது புது­மு­கமா தெரி­யாது. அவங்­க­கிட்ட ஒரு சரளம் இருக்கும். வாழ்க்­கை­யில எப்­பவும் வெற்­றியை எதிர்­பார்க்கக் கூடாது.

டென்னிஸ் வீராங்­கனை மார்ட்­டினா நவ­ரத்­தி­லோ­வா­விடம் ஒரு தடவை, ‘உங்க சிறந்த வெற்றி எது’னு கேட்­டாங்க. அப்ப அவர், தான் சிறப்பா ஆடித் தோற்ற ஒரு மேட்ச் பத்தி சொன்னார்.

அது­மா­தி­ரிதான், ‘தோற்­றாலும் ஜெயிச்­சாலும் மீசையை முறுக்­கு’னு பொசிட்­டிவ்வா சொல்­லி­யி­ருக்கேன். ஏன்னா நம்ம இளை­ஞர்­க­ளுக்கு அதுதான் தேவை.

டைரக்‌­ஷன்ல அனு­பவம் இல்­லாம இறங்­கி­யி­ருக்­கீங்­களே..?
நாங்க நிறைய வீடி­யோக்கள் செய்த அனு­பவம் இருக்கு. எங்க ஆல்­பத்தில் ‘வாடி புள்ள வாடி’­யெல்லாம் இன்­னிக்கு வரை செம ஹிட். அப்­பவே, ‘நீங்க திரைப்­படக் கல்­லூரி மாண­வ­ரா’ன்னு கேட்­டி­ருக்­காங்க.

நான் ஓர் எஞ்­சி­னி­யரிங் ஸ்டூடன்ட்னு சொல்லிச் சொல்லி களைச்சுப் போயி­ருக்கேன். இப்ப பர­வலா அறி­யப்­பட்ட ‘ஜல்­லிக்­கட்டு’ வீடியோ கூட நான் டைரக்ட் பண்­ணி­ன­துதான்.

குறும்­ப­டங்கள் செஞ்­சுட்டு பெரிய திரைக்கு வந்த இயக்­கு­நர்கள் இல்­லையா? அந்த மாதி­ரிதான். இதுல கிடைச்ச அனு­ப­வமே நிறைய. என்­னால முடி­யும்னு நம்­புனேன். படத்தைப் பார்த்­துட்டு சுந்தர்.சி ‘நல்லா இருக்­கு’ன்னு பாராட்­டினார்.

அவர் மாதி­ரி­யான பெரிய அனு­பவம் வாய்ந்த இயக்­கு­நரே இப்­படிச் சொன்­ன­போ­துதான் எனக்கு மூச்சு வந்­தது. விவேக்கின் சமூக அக்­கறை எனக்குப் பிடிக்கும். அதை அவர் கொம­டி­யில சொல்­லுவார். படத்தில் அவர் எனக்கு அப்­பாவா வர்றார். கிட்­டத்­தட்ட அவர்தான் படத்­தோட ஹீரோ.

என்ன சொல்றார் சுந்தர்.சி?
‘ஆம்­பள’ படத்­துக்­காக என்­கிட்ட ‘ஒரே ஒரு பாட்டு போட்டுக் கொடு’னு கேட்டார். நான் கொடுத்­தது ‘பழ­கிக்­கலாம்…’ பாட்டு. ‘யப்பா ரொம்ப புதுசா இருக்­கு­துப்பா..’னு சொல்­லிட்டு மொத்த படத்­தையும் என் கையில கொடுத்­துட்டார்.

நான் அவ­ரோட மியூசிக் டெஸ்ட்­லேயும் பாஸ் பண்­ணினேன். அடுத்து ஜல்­லிக்­கட்டு வீடி­யோவைக் கொண்டு போய் காட்­டினேன்.

‘யோவ், என்­னய்யா… எல்லா பக்­கமும் சிக்ஸர் அடிக்­கி­றீ­யே’னு தட்­டிக்­கொ­டுத்தார். திடீர்னு ‘ஆம்­பள’ பட இசை விழாவில் ‘ஆதியை வைத்து ஹீரோவா படம் தயா­ரிப்­பேன்’னு சொல்­லிட்டார்.

சொன்­னதை செஞ்சார். நானே இயக்­கும்­போது, சொல்ல வந்த கருத்­து­களை, மண் சார்ந்த உணர்­வு­களைச் சொல்ல முடி­யும்னு நினைச்சேன். அதுக்கும் சம்­ம­திச்ச தங்­க­மான மனசு அவ­ரு­டை­யது. இப்ப பாருங்க… 40 நாள்ல மொத்த படத்­தையும் முடிச்சு அவர் கையில கொடுத்­துட்டேன்.

ஜல்­லிக்­கட்டு ஆல்பம் மாதிரி அடுத்து என்ன?
அந்த வீடியோ இளை­ஞர்­க­ளுக்கு ரொம்ப பிடிச்­சது. அதற்­க­டுத்து காவிரி நதிநீர் பிரச்­சினை என் மன­சுல இருக்கு.

ஆனா, அத­னு­டைய உள்ளும் புற­முமான அர­சியல் எனக்குத் தெரி­யல. தக­வல்­களை முழுக்க சேக­ரிக்­கிறேன். அப்­பு­றம்தான் இறங்­குவேன். அது­வ­ரைக்கும் சினி­மாதான்.

அப்போ மியூசிக் ஆல்பம் எல்லாம் அவ்­வ­ள­வு­தானா?
தமிழ்­நாட்­டுல மியூசிக் ஆல்பம் என்­பது ‘கிணத்­துல போட்ட கல்’ மாதி­ரிதான். அது­லேயே சாதிக்க நினைச்சேன். ஆனா இப்ப சூழல் அதுக்­கா­னதா இல்ல. பிடி­வா­தமா இருந்­த­துல, சாப்­பாட்­டுக்கே வழி­யில்­லாத நிலைக்கும் போயிட்டேன். ஒண்ணு புரிஞ்சது. கூட்டத்துல இருந்து எதையும் சொன்னா யாருக்கும் கேட்காது.

பத்தோட பதினொண்ணா போகும். நாமளே ஓர் உயரத்துக்குப் போனா நாம விருப்பப்பட்டதை செய்யலாம். கொஞ்சம் பணம் பார்க்க சினிமாவுக்கு வந்தேன். ஆசைப்பட்ட தனி ஆல்பத்தை இன்னும் சிறப்பா பண்ணுவேன். ப்ளீஸ் வெயிட்..