திரு­ம­ணத்­துக்கு மறுத்த 16 வயதுச் சிறுமி பெற்­றோரால் எரித்­துக்­கொ­லை!!

705

திரு­ம­ணத்­துக்கு மறுத்த 16வயது சிறு­மியை பெற்­றோரும் அவ­ரது சகோ­த­ரனும் கொலை செய்து எரித்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்­நி­லை­யி­லேயே சிறு­மியின் பெற்றோர் மற்றும் அவ­ரது சகோ­த­ர­னையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

தமி­ழ­கத்தின் நாமக்கல் மாவட்ட வாழ­வந்தி கிரா­மத்தைச் சேர்ந்­தவர் தங்­கராஜ். இவ­ரது மகள் ஐஸ்வர்யா (16). தங்­க­ராஜும் அவ­ரது மனை­வியும் மகள் ஐஸ்­வர்­யா­வுக்கும் அவ­ரு­டைய உற­வினர் சுரேஷ் என்­ப­வ­ருக்கும் திரு­மணம் செய்ய முடிவு எடுத்­தனர்.

இந்த திரு­ம­ணத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்த ஐஸ்­வர்யா, இந்த சம்­பவம் குறித்து நாமக்­க­லி­லுள்ள சிறார்கள் பாது­காப்பு நிலை­யத்தில் தகவல் அளித்தார். இத­னை­ய­டுத்து அந்த நிலைய அதி­கா­ரிகள் ஐஸ்­வர்­யாவை காப்­ப­கத்தில் சேர்த்­துள்­ளனர்.

இத­னி­டையே கடந்த புத ன்­கி­ழமை காப்­ப­கத்­துக்குச் சென்ற ஐஸ்­வர்­யாவின் உற­வி­னர்கள், அவருடைய தந்­தைக்கு உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­பட்­டுள்­ள­தாக கூறி, ஐஸ்­வர்­யாவை அழைத்துச் சென்றுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து ஐஸ்­வர்யா கடந்த சனிக்­ கி­ழமை இரவு உடல்­நிலை குறைவால் இறந்­து­விட்­ட­தாக கூறி அவ­ரது உடலை அவர்­க­ளது பெற்­றோர்கள் சுடு­கட்டில் எரித்து விட்­டனர்.

இது குறித்து பொலிஸார் தெரி­வித்­துள்ள­ தா­வது, ஐஸ்­வர்யா அதே பகு­தியை சேர்ந்த 17-வய­து­டைய ஒரு மாண­வரை காத­லித்­துள்ளார். இது­கு­றித்து அறிந்த, ஐஸ்­வர்­யாவின் பெற்றோர், அவர்­களின் உற­வினர் ஒரு­வ­ருக்கு திரு­மணம் செய்ய வைக்க வற்­பு­றுத்தி உள்­ளனர். இதற்கு மறுப்புத் தெரி­வித்த ஐஸ்­வர்யா, தனக்கு பிடித்­த­மான நப­ரைத்தான் திரு­மணம் செய்வேன் என அடம் பிடித்து இருக்­கிறார்.

இதனால் ஆத்­திரமடைந்த அவ­ரது 19-வய­து­டைய அண்ணன் சுபாஷ் ­சந்­துரு, ஐஸ்­வர்­யாவை துப்பட்டாவால் கழுத்தை இறுக்­கி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. இதில் ஐஸ்­வர்யா உயி­ரி­ழந்­துள்ளார். பின்னர் ஐஸ்­வர்­யாவின் உடலை பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­காமல் அவ­ரது தந்தை தங்­கராஜ் மற்றும் உறவினர்கள் எரித்து விட்­டனர்.

இதை­ய­டுத்து ஐஸ்­வர்­யாவை கழுத்தை இறுக்கி கொலை செய்­த­தாக அவ­ரது அண்ணன் சுபாஷ்சந்துரு­வையும், கொலைக்கு உடந்­தை­யாக இருந்­த­தாக தங்­க­ரா­ஜையும் பொலிஸார் கைது செய்­தனர்.

பின்னர் அவர்கள் நாமக்கல் நீதிமன்­றத்­தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவியின் அண்ணன் சுபாஷ்சந்துரு பரமத்தியிலுள்ள சீர்திருத்தப்பள்ளியிலும், தங்கராஜ் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்­ள­னர்.