குப்பைகள் சேகரிக்கப்படும் இடத்தில் நபர் ஒருவர் கார் ஒன்றை நிறுத்திவைத்துச் சென்றதால், அக்காரை சூழ குப்பைத் தொட்டிகளை சுத்திகரிப்பு ஊழியர் ஒருவர் அடுக்கி வைத்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்திலுள்ள குப்பை சேகரிக்கப்படும் பகுதியொன்றில் நபர் ஒருவர் தனது ஆடம்பர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றார்.
இவ் வாகனம் தமது பணிகளுக்கு இடையூறாக இருப்பதை உணர்ந்த சுத்திகரிப்பு ஊழியர் ஒருவர் கடும் ஆத்திரமடைந்தார். அதனால், அவ்வாகனத்தை அங்கிருந்து நகர்த்த முடியாதவாறு குப்பைத் தொட்டிகளை அடுக்க ஆரம்பித்தார்.
சுமார் 40 குப்பைத் தொட்டிகள் அவ் வாகனத்தை சூழ அடுக்கப்பட்டிருந்ததை சிலர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.






