வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பஸ் உரிமையாளர்களின் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு உரிமையாளர்களுக்குச் சொந்தமான 04 பஸ்களுக்கு வழங்கப்பட்டிருந்த போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் அனுமதியை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தற்காலிகமாக இரத்து செய்துள்ளது.
கடந்த 11ம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதுடன் பொலிஸ் அறிக்கையை அடிப்படையாக கொண்டு போக்குவரத்து ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணைகள் முடியும் வரை சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளில் அவர்கள் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் பஸ் சாரதிகள் இருவருக்கு எதிராகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால், இது உறுதிப்படுத்தப்பட்டால் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.