ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து பணியாற்றவில்லை : அனிருத்!!

464

aniruth

வை திஸ் கொல வெறி பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத். இவர் ஆண்ட்ரியாவுடன் உதட்டுடன் உதடு முத்தம் கொடுத்த படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதற்குப்பிற்கு தற்போது உதயநிதி மனைவி கிருத்திகா இயக்கும் வணக்கம் சென்னை படத்தில் இருவரும் சேர்ந்து ஒரு பாடலுக்கு பணியாற்றினார்கள் என்ற செய்தி வெளிவந்தது. இதை அனிருத் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது..

வணக்கம் சென்னை படத்திற்கு நான் இசையமைக்கிறேன். இப்படத்தில் எங்கடி பொறந்த எங்கடி பொறந்த என்ற பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்தபாடலின் ஒரு பகுதிக்காக நான் மும்பையில் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தேன்.

அதே வேளையில் ஆண்ட்ரியாவுடன் எனது உதவியாளர் சென்னையில் ரெக்கார்டிங் செய்துகொண்டிருந்தார். ஆகையால் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை என்றார்.