களவாணி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஓவியா. அதன்பின் மெரினா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். மூன்று படங்களும் வெற்றி பெற்றாலும் ஓவியாவுக்கு குறிப்பிட்ட பட வாய்ப்புகள் வரவில்லை.
இந்நிலையில் ஹீரோக்கள் உங்களை சிபாரிசு செய்ததுண்டா போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது..
எந்த நடிகர்களும் எனக்கு சிபாரிசு செய்ததில்லை. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமே என்னை தொடர்பு கொள்வார்கள். கதைக்கு பொருத்தமாக நான் இருந்தால் ஒப்பந்தம் செய்வார்கள். அப்படியிருந்தால் யாருடைய சிபாரிசும் தேவை இல்லை.
விமலுடன் தொடர்ச்சியாக இரண்டு படங்கள் நடித்தது குறித்து கேட்கிறார்கள். நீங்கள் நினைக்கும்படி அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. என்னுடைய முதல் பட ஹீரோ. என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர். அவ்வளவுதான்.
எனக்கு வரக்கூடிய வாய்ப்புகள் வரும். மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டு பார்க்க இயலாது. கிராமத்து வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கிடையாது. நடிக்க வந்துவிட்டால் எல்லா கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும்.
தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களை ஏமாற்றாத படி கிளாமராக நடிப்பேன். நான் நடித்து இன்று வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் மூடர் கூடம் என்னை வேறு ஒரு இடத்துக்கு அழைத்துபோகும் என்ற நம்பிக்கை உள்ளது.