சுவிஸ்லாந்தில் காதலியை கொடூரமான முறையில் கொலை செய்த இலங்கை தமிழர்!!

229

சுவிஸ்லாந்தில் தன் காதலியை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவருக்கு கடுமையான தண்டனை விதிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொலை தொடர்பிலேயே குறித்த நபருக்கு தண்டனை விதிக்க கூடும் என அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளன.

1998ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையில் 23 வயதான தன் காதலியுடன் குறித்த நபர் சுவிட்ஸர்லாந்தில் பேசல் நகரில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு குறித்த கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

எவ்வாறாயினும், கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை தமிழர் போலி கடவு சீட்டு மூலம் நியூசிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

2004ஆம் ஆண்டு நியூசிலாந்தில் குடியுரிமை பெற்றுக்கொண்ட அவர், Auckland நகரில் குடியேறிய வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

எனினும், கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட காதலியின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மரபணு மூலம் குறித்த தமிழர் தான் கொலையாளி என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நியூசிலாந்து அரசின் உதவியுடன், 2015ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் கொலை குற்றம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்படவுள்ள நிலையில். கடுமையான தண்டனை விதிக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்நாட்டின் பிரதான செய்தித்தாள் ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது.