வவுனியா வெண்கலசெட்டிக்குளத்தில் நடைபெற்ற பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும்!!

525

 
பெண்கள் சுயதொழில் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும் என்ற தொனிப்பொருளின் கீழ் வவுனியா வெண்கலசெட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் (21.12.2016, 22.12.2016) இரு தினங்களும் ஊக்குவிப்பு கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது வீ எபெக்ட் (சுவீடன் கூட்டுறவு நிலையம்) நிறுவனத்தின் அனுசரனையுடன் வரையறுக்கப்பட்ட இலங்கை மகளிர் அபிவிருத்தி சேவை கூட்டுறவு சங்கமும்இ பெண் முயற்சியாண்மையாளர்கள் சமூகநலன் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன் இலங்கை மகளிர் அபிவிருத்தி சேவை கூட்டுறவு சங்கத்தின் வட மாகாண திட்ட இணைப்பாளர் கோ.சுதஸ்கரன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வீ எபெக்ட் நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மு.பிரசாத், வெண்கலசெட்டிக்குளம் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.சண்முகானந்தன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் திட்ட உத்தியோகத்தர் இந்திராணி சுபசிங்க, மகளிர் அபிவிருத்தி சேவை கூட்டுறவு சங்க நிதிமுகாமையாளர் தயா வலேவொட, மகளிர் கூட்டுறவு சங்கதிட்ட உத்தியோகத்தர் ஆ.நவரஞ்சன் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.

இங்கு பெண்கள் தங்களது உள்ளுர் உற்பத்தி பொருட்களை மிகவும் மகிழ்ச்சியுடன் விற்பனை செய்தமையை காணக்கூடியதாக இருந்தது.

வவுனியா நெற் செய்திகளுக்காக கீதன்